தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியில் 7-வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற சுதா மோகன்லால், பின்னர் பேரூராட்சி தலைவியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தனது சொந்த வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு கடந்த 2022-2023 ஆண்டுக்கான சொத்துவரியை உரிய காலத்திற்குள் செலுத்தாமல் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்தது.
இது குறித்து ஆலங்குளம் பேரூராட்சி 9வது வார்டு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவிட்டு, தலைவி சுதா மோகன்லாலின் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது என்று பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வெங்கடகோபு அறிவித்துள்ளார்.
இது குறித்த நீதிமன்ற ஆணையின் படி, கட்டிடங்களுக்கான ரூ.6,500 சொத்துவரியை உரிய காலத்திற்குள் செலுத்தாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?