'கைதி2' வரும்னு பார்த்தா? நடக்காது போலயே.. அக்கட தேசத்தை நோக்கி படையெடுத்த கார்த்தி
CineReporters Tamil October 27, 2025 09:48 AM

 நடிகர் கார்த்தியின் நடிப்பில் அனைவரின் எதிர்பார்ப்பாக இருப்பது கைதி 2 திரைப்படம். கூலி திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி 2 திரைப்படத்தைத்தான் கையில் எடுப்பார் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. ஆனால் கைதி 2 படத்திற்கு முன் லோகேஷ் ஹீரோவாக ஒரு படத்தில் கமிட் ஆகியிருந்ததனால் அந்த படத்தை முடித்துவிட்டுத்தான் கைதி 2க்கு வருவார் என்று கூறப்பட்டது.

ஆனால் கூலி திரைப்படம் விமர்சன ரீதியாக சரியான வரவேற்பை பெறவில்லை என்பதால் ரஜினியை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் லோகேஷ் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதன் பிறகுதான் கைதி 2 மற்றும் விக்ரம் 2 போன்ற படங்களை லோகேஷ் எடுப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையில் கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் குடும்ப ஆடியன்ஸை மிகவும் கவர்ந்த திரைப்படமாக மாறியது.

அதன் பிறகு வா வாத்தியாரே என்ற படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். லோகேஷ் இயக்கிய லியோ, கூலி போன்ற திரைப்படங்கள் விக்ரம், கைதி போன்ற படங்களை போன்று ஒரு தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தவில்லை. மீண்டும் லோகேஷ் எப்போது ஃபார்முக்கு வருவார் என்றுதான் எதிர்பார்த்தனர். அதற்கு கைதி 2 படம் கைக் கொடுக்கும் என்றும் கூறப்பட்டது.

இப்போது வெளியான தகவலின் படி கார்த்தி தெலுங்கில் ஒரு படத்தில் கமிட் ஆகியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் பாலி கோலி இயக்கத்தில் சிரஞ்சீவி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு முழூ நீள கதாபாத்திரத்தில்தான் கார்த்தியும் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது ஒரு பெரிய ஆக்ஷன் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறதாம். 2027 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் படத்தை எடுக்க இருக்கிறார்களாம். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க இருக்கிறார். கார்த்திக் கட்டாமனேனி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.