ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மோன்தா புயலாக உருவாகிறது. வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அக். 28ஆம் தேதி காலைக்குள் புயல் தீவிரமடையும். தீவிர புயலாக வலுவடைந்து 28ம்தேதி மாலை அல்லது இரவு மச்சிலிபட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ வேகத்திலும் அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 770 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கரைநோக்கி நகர்கிறது. 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல்சின்னத்தின் வேகம் தற்போது குறைந்துள்ளது. அக். 28 ஆம் தேதி காலைக்குள் ஒரு கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.