ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து..!!
Top Tamil News October 28, 2025 03:48 PM

மோந்தா புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.