இன்று முருகனின் அறுபடை வீடுகள் உட்பட பிற முக்கிய ஆலயங்களிலும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக நேற்று ஐப்பசி மாத கந்தசஷ்டி விரதத்தின் உச்சநிகழ்வாகிய சூரசம்ஹாரம் வடபழனி, பாரிமுனை கந்தகோட்டம், திருச்செந்தூர், வல்லக்கோட்டை என பல முருகன் கோவில்களில் சிறப்பாக நடைபெறுகிறது.
தமிழர் இதயத்தில் ‘தமிழ் கடவுள்’ எனப் போற்றப்படும் முருகப்பெருமான், அசுரன் சூரபத்மனை வதம் செய்த இந்த நாள், தர்மம் வெற்றி பெற்று தீமை ஒழிந்த தினமாக கருதப்படுகிறது. தீபாவளிக்குப் பின் அமாவாசை பிரதமையிலிருந்து சஷ்டி வரை ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் கந்தசஷ்டி விரதத்தின் நிறைவு நாளாக சூரசம்ஹாரம் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி சென்னையின் முக்கிய முருகன் திருத்தலங்களான வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், திருப்போரூர் சுப்ரமணிய சாமி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இணைந்துள்ள முருக சந்நிதிகளில் நேற்று சூரசம்ஹார விழா நடத்தப்பட்டது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டனர். சூரசம்ஹார நிகழ்வைக் காண கடற்கரையோரம் பெருமளவில் பக்தர்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில் இன்று அக்டோபர் 28ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் முருகன், தெய்வானை வள்ளி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நிறைவடையும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?