சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடையப்பொய்கை காட்டுப்பகுதியில் கார் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், உயிரிழந்தவர் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிக்குமாரின் மனைவி மகேஸ்வரி (35) என அடையாளம் காணப்பட்டார். வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் கணவர் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் வெளிநாட்டில் மருத்துவம் படித்து வர, இன்னொருவர் தனியார் பள்ளியில் கல்வி கற்கிறார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த மகேஸ்வரி, நேற்று காலை ஒரு இடத்தை பார்ப்பதற்காக ஆவுடையப்பொய்கை பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது மர்ம நபர்கள் தலையில் தாக்கி அவரை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், அவர் அணிந்திருந்த நகைக்காகவே இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி கவுதம் தலைமையிலான போலீஸ் குழு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் தேடப்பட்டு வருகின்றன. அதேசமயம், மகேஸ்வரியின் வீட்டின் அருகே வசிக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீசார் அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!