பகீர்... எம்.பி. கல்யாண் பானர்ஜியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.56 லட்சம் சைபர் கொள்ளை!
Dinamaalai November 07, 2025 11:48 PM

 

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜியின் வங்கி கணக்கிலிருந்து ரூ.56 லட்சம் சைபர் குற்றவாளிகள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற கிளையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கல்யாண் பானர்ஜிக்கு கணக்கு இருந்தது. அந்த கணக்கில் அவர் ரூ.56 லட்சம் இருப்பு வைத்திருந்தார். இதை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் அவரது வங்கி கணக்கிற்குள் நுழைந்து முழு தொகையையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.