நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த திரில்லர் திரைப்படமான ‘ரிவால்வர் ரீட்டா’ (Revolver Rita) படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இயக்குநர் சந்துரு இயக்கியுள்ள இந்தப் படத்தை, பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த ‘ரகு தாத்தா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் ஏற்கனவே ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இந்தத் திரைப்படம் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.