Jana Naayagan: வெளியீட்டிற்கு முன்பே லாபம் பார்த்த தளபதி விஜய்யின் ஜன நாயகன்.. அட இத்தனை கோடிகளா?
TV9 Tamil News November 10, 2025 01:48 AM

நடிகர்தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக உருவாகி வருவதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) இணைந்து நடித்துள்ளார். இவர்களின் கூட்டணியில் ஏற்கனவே பீஸ்ட் என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், தற்போது ஜன நாயகன் திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இப்படத்தில் நடிகர்கள் மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், பிரியாமணி மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துளள்னர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைக்க, கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்துள்ளது. நேற்று இந்த படத்தின் முதல் சிங்கிளான “தளபதி கச்சேரி” (Thalapathy Kacheri) என பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடலில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடனமாடியிருந்தனர்.

இந்த பாடலானது 12 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னே இப்படமானது விற்பனையில் எத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளது தெரியுமா? இதுவரை மட்டும் சுமார் 260 கோடிகளுக்கு மேல் இப்படத்தின் உரிமைகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு!

வெளியீட்டிருக்கு முன்னே பலகோடிகளை வசூல் செய்த ஜன நாயகன்:

தளபதி விஜயின் இந்த ஜன நாயகன் படமானது சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் தொடர்பான தகவல்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கொடுத்துவருகிறது. அந்த வகையில் இந்த ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் பெற்றுள்ள நிலையில் சுமார் ரூ 110 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளதாம்.

இதையும் படிங்க :இணையத்தை தெறிக்கவிடும் விஜயின் தளபதி கச்சேரி பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மேலும் இப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் உரிமையை டி-சீரிஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ள நிலையில், இதற்கு ரூ 35 கோடிகளை இந்நிறுவனம் கொடுத்துள்ளது. மேலும் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் சுமார் ரூ 115 கோடிகளை கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் ரிலீசிற்கு முன்னே ஜன நாயகன் படமானது சுமார் ரூ 260 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தில் முதல் சிங்கிள் தொடர்பான பதிவு :

12.5M real time views for #ThalapathyKacheri 🔥

🧨 https://t.co/2yOYCWL0GK#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @Arivubeing @thedeol @_mamithabaiju #SekharMaster @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan… pic.twitter.com/aSHVFDDUcH

— KVN Productions (@KvnProductions)

விஜய்யின் இந்த முதல் பாடலான தளபதி கச்சேரி பாடலை விஜய்யுடன் இணைந்து அனிருத் மற்றும் அறிவு பாடியுள்ளனர். இந்த படலானது வெளியான சில மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்திருந்தது. தொடர்ந்து, இதுவரை சுமார் 13 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.