கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 9 வயது மகனை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த தாய் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க டிரான்ஸ்போர்ட் தொழிலாளர் ஒருவர், அவரது 38 வயதான மனைவி, 17 வயது மகள், 9 வயது மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகளும் தனியார் பள்ளியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் தகவலின்படி, கடந்த சில நாட்களாக தாய் மற்றும் 9 வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்திருந்த அந்த பெண் இன்று அதிகாலையில், வீட்டில் உள்ள படுக்கையறையில் தலையணையால் மகனை அழுத்தி கொலை செய்ததாக போலீசார் கூறினர். பின்னர் அவர் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். தாய்-மகன் உயிரிழப்பு சம்பவம் ஓசூர் பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நிலையால் ஏற்படும் மன அழுத்தம் உயிரிழப்புக்கும் வழிவகுக்கும் சூழல் பற்றி விழிப்புணர்வு தேவை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!