சென்னை, நவம்பர் 10: தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அதில் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பகிரப்படுவதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் கேரள சைபர் கிரைம் போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் உடனடி விசாரணையை தொடங்கிய போலீசார், இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டனர். இதில், போலீசாருக்கே வியப்பு அளிக்கும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபட்டது தமிழகத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் என்பது தெரியவந்தது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்ச காலத்தில் நாம் இருக்கிறோம். இதனால், தற்போது எந்த ஒரு நபரின் தனிப்பட்ட புகைப்படமோ, வீடியோவோ பொதுவெளியில் எளிதாக காணக் கிடைக்கிறது.
இதையும் படிங்க: பேமிலி மேன் சீரிஸ் இயக்குநரை காதலிப்பதை உறுதிப்படுத்திய சமந்தா? வைரலாகும் பதிவு!
AI-ன் அசுர வளர்ச்சி:அப்படி பகிரப்படும் அந்த புகைப்படம், மார்பிங் செய்யப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஏஐ வளர்ச்சி கண்டுள்ளது. இதனால், இணையத்தில் நாம் பார்க்கும் எதையும் நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், உண்மையானவையை விட போலியாக உருவாக்கப்படும் புகைப்படமோ, வீடியோவோ தத்ரூபமாக தோற்றமளிக்கின்றன. அவ்வாறு, சமீப காலமாக ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படுகிறது.
அப்படி, ஒன்றாக தம்மன்னாவின் காவாலா டான்ஸ் வீடியோவை நடிகை சிம்ரன் உள்ளிட்டோர் ஆடியது போல பகிரப்பட்டது. இதனை சிம்ரனே உண்மை போல் உள்ளதாக பகிர்ந்து கருத்து தெரிவித்திருந்தார். அவ்வாறு, பார்ப்பதற்கு உண்மை போலவே காட்சியளித்தாலும், அவை உண்மை இல்லை. வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பத்தால் ஏற்பட போகும் ஆபத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு நிகழ்ந்துள்ளது.
அனுபமாவின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, சில நாட்களுக்கு முன்பு என் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி, அதில் என்னைப் பற்றியும், என் குடும்பம் , நண்பர்கள், சக நடிகர்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதை அறிந்தேன். அடிப்படை ஆதாரமற்றத் தகவல்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பதிவிட்டிருந்தனர். என்னைக் குறிவைத்துத் துன்புறுத்துவதை அறிந்து வேதனை அடைந்தேன்.
தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்:இது தொடர்பாகக் கேரள சைபர் கிரைமில் புகார் செய்தேன். அவர்கள் இந்த போலி சமூக வலைதள கணக்குகளுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டு பிடித்துள்ளனர். அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது. இதைச் செய்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் என்ற தகவல் அதிர்ச்சியாக உள்ளது. அவருடைய வயது மற்றும் எதிர்காலம் கருதிக் கொண்டு, அவர் பெயர் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதையும் படிங்க: அது என் சின்ன வயசு கனவு… எமோஷ்னலாக பேசிய ராம் சரண்
ஸ்மார்ட்போன் வைத்திருப்பதாலோ, சமூக வலை தளங்களைப் பயன்படுத்துவதாலோ அடுத்தவர்களை அவமதிப்பதற்கோ, வெறுப்பைப் பரப்புவதற்கோ உங்களுக்கு முழு உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை. ஆன்லைனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் பதிவாகிறது. இது தொடர்பான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம். இதைச் செய்தவர்கள் அதற்கான வினைகளை எதிர்கொள்ள வேண்டும். சைபர் குற்றம் என்பது தண்டனைக்குரிய செயல் என்று அவர் பதிவிட்டுள்ளார்.