தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்வதில் பொதுமக்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றரோ அதே அளவுக்கு டிஜிட்டல் தங்கத்தில் (Digital Gold) பெரும்பாலான பொதுமக்கள் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக இளைய தலைமுறை முதலீட்டாளர்கள் தங்க ஆபரணங்கள் மற்றும் நாணயங்களை விடவும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்துள்ள நபர்களுக்கும், இனி முதலீடு செய்ய உள்ள நபர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக செபி (Sebi) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் தங்கம் பாதுகாப்பான முதலீடு இல்லை என செபி கூறியுள்ளது. இந்த நிலையில், டிஜிட்டல் தங்கம் குறித்து செபி கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிஜிட்டல் தங்கம் குறித்து செபி கூறுவது என்ன?ஆன்லைன் தங்கள மற்றும் செயலிகள் மூலம் விற்பனை செய்யப்படும் டிஜிட்டல் தங்கம் மற்றும் இ தங்கம் குறித்து செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த தங்கங்கள் ஒழுங்குப்படுத்தப்படவில்லை, பத்திரங்கள் மற்றும் வழிதோன்றல் குறித்து வகைப்படுத்தப்படவில்லை. எனவே அவை வரம்புகளுக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுவதாக செபி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தளங்கள் ஏதேனும் சிக்கலை சந்திக்கும் பட்சத்தில் உங்கள் பணம் முழுவதுமாக சென்றுவிடும். உங்களுக்கு அதற்கான சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்காது என்றும் செபி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ரீச்சார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தும் நிறுவனங்கள்.. பயனர்கள் அதிர்ச்சி!
தங்கத்திற்கு பதிலாக விற்பனை செய்யப்படும் டிஜிட்டல் தங்கம்டிஜிட்டல் தங்கம் மற்றும் இ தங்க பொருட்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் வாய்ப்பு வழங்குகின்றன. இந்த முதலீடுகள் தங்க நகைகளுக்கு மாற்றாக கருதப்படுகிறது. ஆனால், கோல்டு இடிஎஃப் (ETF – Exchange Traded Commodity) மற்றும் இஜிஆர் (EGR – Electronic Gold Receipts) போல இந்த டிஜிட்டல் தங்கம் மற்றும் இ தங்கம் செபியின் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வரவில்லை என்று செபி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : BNPL மூலம் பொருட்களை வாங்குவது உண்மையில் பாதுகாப்பானது இல்லையா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!
செபி ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் தங்கத்துடன் ஒப்பிடும் பட்சத்தில் டிஜிட்டல் தளங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தங்கம் பாதுகாப்பு குறைவானதாக உள்ளது என்று செபி தெரிவித்துள்ளது. இத்தகைய தங்க முதலீடுகள் ஒழுங்குமுறை அற்ற அமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், நீங்கள் இந்த தளங்களில் முதலீடு செய்யும் பணத்துக்கான தங்கத்தை வழங்க தவறினால் செபி அதற்கு பொறுப்பு ஏற்காது என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.