வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தில் இன்று (நவம்பர் 10) தமிழகத்தின் பல இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (நவம்பர் 11) முதல் 13ம் தேதி வரை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை வலுப்பெறக்கூடும். குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேசமயம், 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களில் லேசான மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!