உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் மனிதாபிமானமே இல்லாத கொடூரச் சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத உறவை மறைப்பதற்காக 6 வயது குற்றமறியாத சிறுமியை கொலை செய்து, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் தெரிவித்ததாவது, பிங்கி சர்மா (33) என்ற பெண், தனது கணவர் மற்றும் மாமியார் இல்லாதபோது, 17 வயது காதலனை வீட்டிற்கு அழைத்து தகாத உறவில் இருந்துள்ளார். அதன்போது 6 வயது சிறுமி உர்வி அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டார். இதைக் கூறிவிடுவேன் என்று மிரட்டிய சிறுமியை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசியுள்ளனர்.

இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், போலீசார் பிங்கி சர்மாவை கைது செய்தனர். சிறுமியுடன் போராடியபோது பிங்கியின் கையில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி உயிரிழந்த சம்பவம் ஹத்ராஸ் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!