இந்தியத் திரைப்படத் துறையில் தனித்துவமான கலை வடிவமைப்புகளால் புகழ் பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் மதிப்புமிகு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படக் கலைக்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி பிரான்ஸ் கலாசார துறை இந்த விருதை வழங்குகிறது.
தமிழ், தமிழ் உட்பட பல மொழித் திரைப்படங்களில் தத்ரூபமான செட் அமைப்புகளுக்கு பெயர்ப்பெற்றவர் தோட்டா தரணி. நாயகன் படத்தில் தாராவி பகுதியை சென்னையிலேயே உருவாக்கியது, இந்தியன் படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள், சிவாஜி படத்தின் ‘வாஜி வாஜி’ பாடல் செட் என பல படங்களில் அவரது கலைத் திறன் பாராட்டப்பட்டது.
மேலும் தசாவதாரம், காதலர் தினம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அவர், சமீபமாக குபேரா, ஹரிஹர வீர மல்லு, காட்டி போன்ற திரைப்படங்களுக்கும் கலை வடிவமைப்பு செய்திருந்தார்.
திரைப்படக் கதை, வரலாறு, கலை வடிவமைப்பு என பல துறைகளில் ஆழ்ந்த அறிவு கொண்ட அவர், பல இயக்குநர்களின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த விருது நவம்பர் 13ம் தேதி சென்னை அலையன்ஸ் பிரான்சே விழாக் வளாகத்தில் பிரான்ஸ் தூதரால் வழங்கப்பட உள்ளது. அங்கு தற்போது தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் இதற்கு முன் சிவாஜி கணேசன், கமல் ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தச் செவாலியே விருதைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!