டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் (ATC) நேற்று காலை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெரும் குழப்பம் நிலவியது. தினசரி 1,550க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படும் இந்த விமான நிலையத்தில் தானியங்கி செய்தி மாற்று அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 700க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானது.
காலை 5.45 மணியளவில் ஏற்பட்ட இந்த கோளாறால் தானியங்கி கண்காணிப்பு மற்றும் தகவல் பரிமாற்ற அமைப்புகள் செயலிழந்தன. இதனால் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கையேடு முறையில் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக புறப்படும் மற்றும் வரும் விமானங்கள் பெருமளவில் தாமதமானன.

இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்களின் சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதென அதிகாரிகள் தெரிவித்தாலும், அதன் தாக்கம் இன்னும் நீடித்து வருவதால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!