குரு நானக் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) ஆகியவற்றுக்கு இன்று (நவம்பர் 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (நவம்பர் 4) வர்த்தக நிறைவில், சென்செக்ஸ் 519.34 புள்ளிகள் சரிந்து 83,459.15 புள்ளிகளாகவும், நிஃப்டி 165.70 புள்ளிகள் சரிந்து 25,597.65 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.
சென்செக்ஸில் பவர் கிரிட், எடர்னல், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், மாருதி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. அதேசமயம், டைட்டன், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்வைக் கண்டன.

நிஃப்டியிலும் இதே போக்கே காணப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று பங்குச் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், வர்த்தகம் மீண்டும் நாளை (வியாழக்கிழமை) காலை வழக்கம்போல தொடங்கும் என பங்குச் சந்தை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!