திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த இளம்பெண், திடீரென கள்ளக்காதலனுடன் பேச மறுத்ததால் ஆத்திரத்தில் இளம்பெண்ணை கள்ளக்காதலன் அரிவாளால் வெட்டியது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் பெருந்தொழு பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (30), கணவனை இழந்த பின் மகளுடன் தனியாக வசித்து வந்த சித்ரா, பக்கத்து வீட்டில் இருந்த மெக்கானிக் கருப்பண்ணனுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கமா பழகி வந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். அதே சமயம் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சித்ரா அந்த உறவை முறித்துக் கொண்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவல்துறையில் கருப்பண்ணன் குறித்து புகார் அளித்திருந்தார். இருவரும் இனி தொடர்பு கொள்ள மாட்டோம் என எழுத்துப் பத்திரத்தில் கையெழுத்திட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கருப்பண்ணன் மீண்டும் சித்ராவை சந்தித்து பேச முயன்றார். ஆனால் சித்ரா மறுத்ததால், கோபமடைந்த அவர் சித்ராவின் வீட்டிற்குள் நுழைந்து, தகராறில் அரிவாளால் சித்ராவை வெட்டியுள்ளார். இதில் சித்ராவின் கை, கால் கடுமையாக வெட்டுண்டு, இடது கை உடைந்து தொங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்தார். பின்னர் மனமிரங்கிய கருப்பண்ணன், தானே 108 ஆம்புலன்ஸை அழைத்து சித்ராவை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், காவல் நிலையத்திலும் சரணடைந்தார்.
சித்ரா தற்போது கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் பேச மறுத்ததால், அரிவாளால் தாக்கிய பின்னரும் ஆம்புலன்ஸ் மூலம் தானே மருத்துவமனைக்கு அனுப்பிய காதலன் சம்பவம், திருப்பூர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!