தங்கம் விலை கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து ஏற்ற-இறக்கம் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் வரை குறைந்தது. பின்னர் விலை மீண்டும் உயரத் தொடங்கி, சில நாட்களில் ரூ.93 ஆயிரத்தை மீண்டும் எட்டியது. நேற்றைய நிலவரப்படி சற்று குறைந்திருந்தாலும், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.11,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக இருந்த மாறாட்டத்துக்குப் பிறகு, இன்றைய திடீர் உயர்வு நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதனுடன், வெள்ளி விலையும் உயர்வைச் சந்தித்துள்ளது. கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.182-க்கும், கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலைகளின் இந்த திடீர் ஏற்றம், வரவிருக்கும் கார்த்திகை மற்றும் திருமண பருவத்தில் சந்தை சூட்டை கூட்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!