125 பேர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பினர்... ஒவ்வொருவரின் கால்களையும் கழுவி வரவேற்ற பாஜக எம்.எல்.எ.,
Dinamaalai November 13, 2025 03:48 PM

நூற்றுக்கும் மேற்பட்டோர்  மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிய நிலையில், தனித்தனியே ஒவ்வொருவரின் கால்களையும் கழுவி பாஜக எம்.எல்.ஏ., வரவேற்றார். சத்தீஷ்கார் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தின் நியூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள், நீண்ட காலம் பிற மதங்களில் இருந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பினர். மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேர் இந்து மதத்தில் இணைந்தனர். இதனை ஒட்டி, “கர் வாபசி” எனப்படும் மதமாற்ற நிகழ்ச்சி  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பண்டாரியா தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பாவனா போரா கலந்து கொண்டு, இந்து மதத்திற்கு திரும்பிய மக்களை பாரம்பரிய முறையில் வரவேற்றார். அவர்களின் கால்களை கழுவி ஆசீர்வதித்த அவர், அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாவனா போரா, “பழங்குடியின மக்கள் தங்கள் பூர்வீக மதம் மற்றும் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கள் வரலாறு, கலாசாரம், மரபுகள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க விரும்பினால், பூர்வீக மதத்திற்கே திரும்புவது அவசியம்” எனக் கூறினார். இந்த நிகழ்வு சத்தீஷ்கார் மாநிலம் முழுவதும் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.