மத்தியப் பிரதேசம் சிந்த்வாராவை அதிர்ச்சியடையச் செய்த கலப்பட இருமல் மருந்து விவகாரத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், மருந்தில் ஆபத்தான நச்சுப்பொருட்கள் அதிக அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அதன் ஆலை மூடப்பட்டது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு உலக சுகாதார அமைப்பு அவசர மருத்துவ எச்சரிக்கை வெளியிட்டு, குறைவான கண்காணிப்புடன் விற்கப்படும் இருமல் மருந்துகள் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தது. பல மாநிலங்கள் சில இருமல் மருந்துகளை தடை செய்த நிலையில், மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதன்படி இனி மருத்துவர் பரிந்துரை இன்றி இருமல் மருந்து வாங்க முடியாது. மருந்து கடைகளில் மட்டுமே இம்மருந்துகள் விற்கப்படும் புதிய விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமல்படுத்தியுள்ளது. முன்பிருந்த சுதந்திர விற்பனை முறைக்கு முடிவுக்கட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் கடும் கண்காணிப்பு தொடங்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!