சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா டிசம்பர் 2 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கவான வொண்டர்லா ஹாலிடேஸ் பூங்கா டிசம்பர் 2 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்தான செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம் பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் கவொண்டர்லா நிர்வாக இயக்குநர் அருண் கே.சிட்டிலப்பள்ளி, சிஇஓ தீரன் சவுத்ரி மற்றும் சென்னை பூங்கா தலைவர் வைஷாக் ரவீந்திரன் ஆகியோர் லந்து கொண்டனர்.
பூங்கா தலைவர் வைஷாக் ரவீந்திரன் பேசுகையில், சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் 64.30 ஏக்கர் பரப்பளவில் 611 கோடி ரூபாயில் இந்த புதிய வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது, என்றும் இதில் 43 உலக தரம் வாய்ந்த சவாரிகள் உள்ளதாகவும், உயர் திரில், குடும்பம், குழந்தைகள் மற்றும் நீர் விளையாட்டுகள் என்ற பிரிவுகள் உள்ளன என கூறிய அவர்கள் தினமும் 6,500 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிள்ளதாகவும் கூறினார்கள். வொண்டர்லா சென்னைக்கான அடிப்படை விலை டிக்கெட்டுகள் 1,489 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடியும், கல்லூரி ஐடியை மாணவர்களுக்கு 20% சலுகையும், குழுக்கள் மற்றும் பருவக்காலங்களுக்கு ஏற்ப பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளும் உள்ளதாக தெரிவித்தார்கள்.
வொண்டர்லா சென்னையில் உலகத்தரம் வாய்ந்த சவாரிகளான மிகப்பெரிய பொலிகர் மற்றும் மாபில்லார்ட் இன்வெர்ட்டர்ட் கோஸ்டர் தஞ்சோரா, ஸ்பின் மில், ஸ்கை ரயில் உள்ளிட்ட பல சவாரிகள் உள்ளதாகவும் கூறினர். சவாரிகள் மட்டுமின்றி உணவு அரங்குகள், நிகழ்ச்சிகள், சில்லறை விற்பனை சலுகைகள், தமிழ் சினிமாவால் ஈர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்களுடன் இணைந்து தஞ்சாவூர் மற்றும் மரப்பாச்சி பொம்மைகளை உருவாக்கி பிராந்திய கைவினை மரபுகளை ஆதரிக்கும் வகையில் இந்த பொழுதுபோக்கு பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.