நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 3 படங்கள் வெளியாகியிருந்தாலும், வெளியான 3 படங்களும் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் டியூட் (Dude). அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ (Mamitha baiju) இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றிபெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக தற்போது புதிய படங்களுக்காக கதைகளை கேட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் தன்னுடன் கோமாளி (Comali), லவ் டுடே (Love Today) போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் நாராயணசாமி (Ramesh Narayanasamy) என்பவருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இது தொடர்பான பதிவை உதவி இயக்குநர் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மணிரத்னத்தினத்தின் படம் குறித்து அப்டேட் சொன்ன தமிழ் பிரபா – உற்சாகத்தில் ரசிகர்கள்
View this post on Instagram
A post shared by Ramesh Narayanan (@rameshnarayanasamy)
இந்த பதிவில் ரமேஷ் நாராயணசாமி, “இது என்னுடைய முதல் கார், எனது நண்பனிடமிருந்து. இது வெறும் பரிசு அல்ல, நம்பிக்கை மற்றும் நாணங்கள் பகிர்ந்துகொண்ட பயணத்தில் சின்னம். இந்த அழகான பரிசிற்கு, எப்போது என்னை நம்பியதற்கும் மிக்க நன்றி. இந்த கார் என்றும் எனது நினைவில் இருக்கும்” என அந்த பதிவில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் :டியூட் படத்தை அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் சாருக்கு அந்தமாதிரி கதையில் படம் எடுக்கவேண்டும் என ஆசை- நினைத்ததை சாதித்த ஹெச்.வினோத்!
இப்படமானது சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேல் தயாராகிவரும் நிலையில், நிச்சயமாக இந்த 2025ம் ஆண்டில் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கும் நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.