தந்தை உடலை அடக்கம் செய்ய கூடப் பணம் இல்லை… பிள்ளைகளின் துயரத்தை கண்டு கைகொடுத்த கிராமம்!
Dinamaalai November 19, 2025 09:48 AM

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் இதயத்தையும் உருக்கியுள்ளது. கூலித் தொழிலாளி கமலக்கண்ணன் (46) உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி காலமானார். ஏழு ஆண்டுகளுக்கு முன் மனைவி வசந்தாவை இழந்த அவர், நான்கு பிள்ளைகளை தனியாக வளர்த்து வந்தார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவர் நான்கு மாதமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வருமானம் இல்லாததால் குடும்பம் கடும் வறுமையில் சிக்கியது.

தந்தையின் மரணம் பிள்ளைகளை மேலும் துயரத்தில் தள்ளியது. உடலை அடக்கம் செய்ய கூட பணமின்றி பரிதவித்த அந்த நான்கு பிள்ளைகளுக்கு உறவினர்களும் உதவ முடியாத நிலை. லாவண்யா, ரீனா, ரிஷிகா ஆகிய மூன்று மகள்களும் வறுமையால் படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருந்தனர்; 13 வயது அபினேஷ் மட்டும் அரசு பள்ளியில் படித்து வருகிறார். தந்தையின் உடலை ஊருக்குக் கொண்டு வந்தபோது, இறுதிச் சடங்குக்குத் தேவையான தொகை கூட இல்லாததை கண்டு கிராம மக்கள் மனதளவில் கலங்கினர்.

உணர்ச்சி பொங்கிய கிராம மக்கள் மனிதாபிமானத்துடன் முன்வந்து வீடு வீடாகச் சென்று பணம் திரட்டி, இறுதிச் சடங்கை தாமாகவே செய்து முடித்தனர். பெற்றோரின்றி நான்கு குழந்தைகள் தவிக்கும் நிலையும், கிராமம் ஒன்றுபட்டு உதவிய செயலும் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வறுமையின் கொடுமையையும், மனிதநேயத்தின் மகத்துவத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்திய சம்பவமாக அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.