வாக்காளர் திருத்த ஆன்லைன் விண்ணப்பத்தில் சிக்கல்: ஆதார் பெயர்ப் பொருத்தம் இல்லையா? என்ன செய்யலாம்?!
Seithipunal Tamil November 19, 2025 11:48 AM


சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4-ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 94% வீடுகளுக்குப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதில் பொதுமக்கள் பல சிரமங்களைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர்.

குறிப்பாக, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது, ஆதார் எண் ஓ.டி.பி. அங்கீகாரம் கோரப்படுகிறது. அப்போது, பெரும்பாலானோருக்கு "உங்களது பெயர் சரியாக இல்லை" என்றே பதில் வருகிறது.

இதுகுறித்துத் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் விளக்கமளிக்கையில், "ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பொதுவாகத் தமிழகத்தில் ஆதார் அட்டையில் ஒருவரின் பெயருடன் 'இனிசியல்' அல்லது தந்தை பெயர் முழுமையாகச் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், வாக்காளர் அட்டையில் பெரும்பாலும் முதல் பெயர் மட்டுமே இருக்கும்; இனிசியல் சேர்க்கப்பட்டிருக்காது" என்று தெரிவித்தார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.