கோவை, மதுரை மெட்ரோ எல்லோருக்கும் விருப்பம்தான் அதை யாரும் தடை செய்யவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மோடி அவர்களை வரவேற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். பீகார் வெற்றிக்குப்பிறகு நிதிஷ்குமார் முதலமைச்சராக போவதற்கு முன்னால் வந்தது மிக்க மகிழ்ச்சி விவசாயிகளுக்காக வந்ததும் மிக்க மகிழ்ச்சி எல்லா கூட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்றதிலும் எங்களுக்கு மகிழ்ச்சி. கோவை, மதுரை மெட்ரோ எல்லோருக்கும் அது விருப்பம் தான் அதை யாரும் தடை செய்யவில்லை.
பா.ஜ.க.வை புறம் தள்ளி அதனால் தான் இன்றைக்கு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள் அது எல்லாம் பொய். சென்னை விமான நிலையம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. தூத்துக்குடி ஏர்போர்ட் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. ரூ.11 லட்சம் கோடி ரூபாயை கோடி ரூபாய்க்கு வளர்ச்சித் திட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் அவர்களுக்கு பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்று எண்ணம் இருக்கிறது. விஜய் கிட்ட இருந்தா மற்றவர்கள் இருந்தும் கருத்து வரை வரைக்கும் தினம் ஒரு செய்தியை சொல்கிறார்கள். புயல் மட்டுமல்ல கூட்டணியும் வலுவடைந்து கொண்டே போகிறது” என்றார். காரில் ஏறிய தமிழிசை சவுந்திரராஜனிடம் பிரதமர் அடிக்கடி வருவாரா என கேட்டதற்கு ஸ்டாலினுக்கு அடி கொடுக்க பிரதமர் அடிக்கடி வருவார் எனக் கூறி சென்றார்.