யுகேவில் வசிக்கும் அருணாசல் பிரதேசத்தைச் சேர்ந்த பெம் வாங் தொங்க்டொக் என்ற இந்தியப் பெண்ணுக்கு சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அவமானம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் இருந்து ஜப்பான் பயணித்த அவர், நவம்பர் 21-ம் தேதி இடைநிறுத்தமாக இறங்கிய போது, சீன குடிவரவுத்துறை அதிகாரிகள் அவரது இந்தியப் பாஸ்போர்ட்டை ஏற்க மறுத்து, “அருணாசல் பிரதேசம் சீனப் பகுதியாகும்; எனவே இந்த பாஸ்போர்ட் தவறானது” என்று கூறி 18 மணி நேரத்துக்கும் மேலாக தடுத்து வைத்ததாக அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி, அருணாசல் முதலமைச்சர் பெமா காண்டு உள்ளிட்டோருக்கும் அவர் டேக் செய்து, அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். பின்னர் ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியிலும், இந்திய வெளிவிவகார அமைச்சகம், பிரதமர் அலுவலகம், மாநில முதல்வர் ஆகியோருக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாகவும், இறுதியில் இந்திய தூதரகத்தின் தலையீட்டில் தான் பயணம் தொடர முடிந்ததாகவும் கூறினார்.

அருணாசல் பிரதேசம் தொடர்பாக சீனாவின் உரிமை கோரல் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகி வரும் நிலையில், இந்த சம்பவம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் உள்ள 27 இடங்களுக்கு சீனா பெயர்மாற்றம் செய்ததை இந்தியா “அர்த்தமற்ற செயல்” என்று கடுமையாக எதிர்த்தது. “அருணாசல் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி; பெயர் மாற்றம் உண்மையை மாற்ற முடியாது” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தற்காலிகமாக வலியுறுத்தி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!