இந்திய அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளத்தில் முக்கியக் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். "இந்தியா அனைவருக்கும் சொந்தமானது; ஒரு குறிப்பிட்ட கலாசாரம் அல்லது சித்தாந்தத்திற்கு மட்டும் அல்ல" என்று அவர் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பை வடிவமைத்த பாபா சாகேப் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை சிதைக்க முயலும் சக்திகளை எதிர்த்து நிற்போம் என்றும் அவர் உறுதி அளித்தார்.
மேலும், "உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்வோம்" என்று குறிப்பிட்ட அவர், "நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதே, நமது அரசியலமைப்பிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு நாளில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
Edited by Mahendran