கடலூர் அருகே கிழக்கு ராமாபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஞானசேகரன்–முனியம்மாள் தம்பதிகளின் மகள் தேவிகா (17), மேற்குராமாபுரம் அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
நேற்று, ஞானசேகரனும் அவரது மனைவியும் ஊரில் நடைபெற்ற காளி கோவில் கும்பாபிஷேக விழாவுக்குச் செல்ல தயாரானபோது,“நானும் வருகிறேன்” என்று தேவிகா கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், “நீ வர வேண்டாம்” என்று தந்தை கூறியதால், அவர் வராமல் வீட்டிலேயே இருந்தார்.கும்பாபிஷேகத்தை பார்த்து வீடு திரும்பிய பெற்றோர்,மேற்கூரையில் உள்ள கம்பியில் தேவிகா தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்ததை கண்டு கலங்கியுள்ளனர்.
உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுத காட்சி அப்பகுதியை உலுக்கியது.இந்த தகவல் பெறப்பட்டதும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதன்பின், தேவிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.மேலும்,ஞானசேகரனின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் முழு பகுதிக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.