டிரெண்டிங்கான விஜய்:
சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் ட்ரெண்டிங் ஆனது. பிரபல சினிமா தயாரிப்பாளர் டி சிவா அவர்களின் மகள் திருமண வரவேற்புக்கு விஜய் வந்தது தான் அனைவருக்குமான சர்ப்ரைஸாக இருந்தது. இதைப் பற்றி தயாரிப்பாளர் டி சிவாவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தன்னுடைய ஒரே மகள் திருமணத்தை கோலாகலமாக நடத்த வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் நினைப்பார்கள்.
அப்படித்தான் டி சிவாவும் நினைத்து இருக்கிறார். மகள் திருமணத்தை மாப்பிள்ளை ஊரான தஞ்சாவூரில் நடத்தி இருக்கிறார்கள். அந்த திருமணத்திற்கு பிரபு தன்னுடைய மனைவியுடனும் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் மணமக்களை வாழ்த்தி சென்றதாக சிவா கூறினார். அதனால் வரவேற்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு நேற்று முன்தினம் தான் அந்த திருமண வரவேற்பு நடந்தது.
சர்ப்ரைஸ் செய்த விஜய்:
மிகப்பெரிய அளவில் பொருட்செலவும் இல்லாமல் ஓரளவு நன்றாக நடத்த வேண்டும் என்றும் திட்டமிட்டு இந்த வரவேற்பை நடத்தியதாக டி சிவா கூறினார். கிட்டத்தட்ட 1500 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு அனைவருக்கும் கொடுத்திருக்கிறார். அதனால் அழைத்த அனைவருமே வந்து விட்டதாகவும் டி சிவா கூறினார். இதில் எனக்கு ஒரு பெரிய வியப்பாக இருந்தது விஜயின் வருகைதான் என்று டி சிவா கூறியுள்ளார்.
அவர் வருவார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் இப்பொழுது இருக்கிற சூழ்நிலையில் ஒரு சந்தேகம் இருந்தது. அவருக்கு அழைப்பிதழ் வைக்கும் பொழுது நான் அவரை கண்டிப்பாக வரவேண்டும் என நிர்பந்திக்கவில்லை. ஏனெனில் அவருடைய இப்போதைய சூழ்நிலை என்ன என்பது எனக்கு தெரியும். நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். அப்போது அது என்ன வந்தால்? நான் கண்டிப்பாக வருவேன் என விஜய் கூறியதாக டி சிவா தெரிவித்தார்.
காதில் பேசிய விஜய்:
ஆனால் அவர் வருவது எனக்கு மட்டும்தான் தெரியும். மண்டபத்தில் இருந்தவர்கள் என்னுடைய குடும்பத்தார் என யாருக்குமே தெரியாது. அதைப்போல அவருடைய பாதுகாப்பு என்பது அரசியலுக்கு வந்த பிறகு முற்றிலுமாக மாறிவிட்டது. நான் எந்த ஒரு புரோட்டோகாலையும் பின்பற்றவில்லை. அங்கிருந்து எனக்கு தகவல் வந்தது, விஜய் கண்டிப்பாக வருவார். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறியிருந்தார்கள்.
அதேபோல காரில் வந்து இறங்கினார். மேடை வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு வேறொரு காரில் ஏறி சென்று விட்டதாக டி சிவா தெரிவித்தார். இதில் ஹைலைட்டாக பார்க்கப்பட்ட விஷயம் என்னவெனில் மேடையில் சிவாவும் விஜயும் காதில் ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டனர். அது என்ன என்று கேட்டதற்கு சொன்ன மாதிரியே வந்துட்டீங்க என்று டி சிவா கூறியிருக்கிறார். அதற்கு விஜய் சொன்னதை நான் கண்டிப்பாக செய்வேன். அது உங்களுக்கு தெரியாதா? என்று கூறினாராம் விஜய். இதைத்தான் மேடையில் நாங்கள் பேசினோம் என ஒரு பேட்டியில் சிவா தெரிவித்திருக்கிறார்.