அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி பல முன்னணி வீரர்களுடன், டெல்லி உள்நாட்டு கிரிக்கெட் வீரரான சர்தக் ரஞ்சனை ₹30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அரசியல் பின்னணி:
சர்தக் ரஞ்சன், பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் (MP), காங்கிரஸ் மூத்த தலைவருமான பப்பு யாதவ் (எ) ராஜேஷ் ரஞ்சனின் மகன் ஆவார். டெல்லி அணிக்காக விளையாடி வரும் சர்தக், இதுவரை 2 முதல்தரப் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு:
தனது மகனின் வெற்றி குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பப்பு யாதவ், "வாழ்த்துகள் மகனே! உன் திறமையால் உனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கு. உன் ஆசைகளை நிறைவேற்று! இனி சர்தக் என்ற பெயரில் எங்கள் அடையாளம் உருவாகும்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் மெகா டீம்:
இந்த ஏலத்தில் கேமரூன் கிரீனை ₹25.20 கோடிக்கு எடுத்து சாதனை படைத்த கொல்கத்தா அணி, சர்தக் ரஞ்சன் உட்பட மொத்தம் 13 வீரர்களை வாங்கியுள்ளது.
முக்கிய வீரர்கள்: மதீஷா பத்திரனா (₹18 கோடி), முஸ்தாபிசுர் ரஹ்மான் (₹9.20 கோடி), ரச்சின் ரவீந்திரா (₹2 கோடி), ராகுல் திரிபாதி (₹75 லட்சம்).
அரசியல் பின்புலம் இருந்தாலும், தனது கடின உழைப்பால் ஐபிஎல் களத்திற்குள் நுழைந்துள்ள சர்தக் ரஞ்சனுக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.