ஈரோடு மாவட்டத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கரூரில் அண்மையில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். ஈரோடு மாநகர் முழுவதும் விஜய்க்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "ஈரோடு வரை வந்த நீங்க, பக்கத்தில் இருக்கும் கரூருக்கு போய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லையே ஏன்?" என கேட்கப்பட்டுள்ளது.
"கரூருக்குப் போக நேரமில்லை, ஆனால் ஆடியோ லான்சிற்காக மலேசியா செல்கிறீர்களா? இது ரொம்ப தப்பு ப்ரோ" எனச் சமூக வலைதள பாணியில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
கரூரில் நடந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, ஈரோடு விஜயமங்கலம் கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்திலும் தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறாததை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், கரூருக்கு விஜய் செல்ல தயார், தமிழக அரசு அனுமதி வழங்குமா? என தவெகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Edited by Siva