2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் தற்போதைய குழப்பமான நிலை குறித்து மூத்த பத்திரிகையாளர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி இன்னும் ஒரு நிலையான வடிவத்தை எட்டவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாகவே கூட்டணி கணக்குகள் முடிவாக வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க மறுக்கும் பிடிவாதம் ஒரு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
மற்றொரு பக்கம், பாமக-வில் ஏற்பட்டுள்ள ராமதாஸ் - அன்புமணி இடையிலான குடும்ப பூசல், அந்த கட்சியை இரண்டு அணிகளாக பிரிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. வட மாவட்டங்களில் பாமக-விற்கு இருக்கும் 10% வாக்கு வங்கி தற்போது எங்கே செல்லும் என்பதே தெரியாத சூழலில், அந்த வெற்றிடத்தை விஜய்யின் தவெக ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.
இறுதியாக, தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் பட்சத்தில், அது ஆளும் திமுக கூட்டணிக்கே மிகப்பெரிய சாதகமாக அமையும். எதிர்க்கட்சிகள் சிதறிக்கிடக்கும் வரை திமுக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்வது எளிதாகிவிடும். எதிர்க்கட்சியாக அதாவது இரண்டாமிடத்தை தவெக பிடித்து, அதிமுகவை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva