19 பேரை பலி வாங்கிய உபி சாலை விபத்து.. உடல்களை அடையாளம் காணுவதில் நீடிக்கும் சிக்கல்!
TV9 Tamil News December 19, 2025 01:48 PM

மதுரா, டிசம்பர் 19 : உத்தர பிரதேசத்தின் (UP – Uttar Pradesh) மதுரா நகரில் டிசம்பர் 16, 2025 அன்று யமுனை விரைவி சாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் தெரியாததால் வாகனங்கள் அடுத்து அடுத்து மோதி கடும் விபத்துக்கு உள்ளாகின. அதாவது, இந்த விபத்தில் மொத்தம் 8 பேருந்துகள் மற்றும் இரண்டு சிறிய வகை வாகங்கள் என மொத்தம் 10 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கடும் விபத்துக்கு உள்ளாகின. இந்த விபத்தை தொடர்ந்து அந்த வாகனங்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளன.

கோர விபத்தில் உடல் கருகி பலியான 15 பேர்

இந்த பயங்கர விபத்தில் 15 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் சுமார் 90 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் சிலர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியாகினர். இதன் மூலம் ஏற்கனவே உயிரிழந்தவர்கள் 15 பேர் மற்றும் அதற்கு பிறகு உயிரிழந்தவர்கள் என இந்த விபத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : ஐயப்பன் பகடி பாடல் அவமதிப்பு…3 பேர் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு!

உடல்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்த இந்த விபத்தில் மொத்தம் பலியான 19 பேரில் 5 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கொடூர சாலை விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இனி வரும் காலங்களில் இத்தகைய விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : இனி மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சுங்கச்சாவடிகளை கடக்கலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!

கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகள் தெரியாததால் 10 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.