ஆஸ்கார் நேரலை ஒளிபரப்பு.. இனி யூடியூபில் மட்டுமே.. 5 வருடங்களுக்கு ஒப்பந்தம்..!
Webdunia Tamil December 19, 2025 01:48 PM

திரைத்துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை யூடியூப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்வை, இதுவரை ஏபிசி தொலைக்காட்சி சேனலே பல ஆண்டுகளாக ஒளிபரப்பி வந்தது.

தற்போது எடுக்கப்பட்டுள்ள புதிய முடிவின்படி, 2029 முதல் 2033 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஆஸ்கர் நிகழ்வுகளை உலகளவில் ஒளிபரப்பும் உரிமத்தை அகாடமி நிர்வாகிகள் யூடியூப் தளத்திற்கு வழங்கியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை மிக எளிதாக சென்றடையவும், நவீன டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப இந்த கலாசார நிகழ்வை விரிவுபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து விலகி, இணையதள தளத்திற்கு மாறியிருப்பது ஊடகத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி உள்ள எவரும் ஆஸ்கர் கலை திருவிழாவை தடையின்றி நேரலையில் கண்டு மகிழ முடியும்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.