சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், பெண்மணி ஒருவர் குரங்குகளுக்கு மிகுந்த அன்புடன் சூடான ரொட்டிகளை சமைத்து வழங்கும் காட்சி அனைவரின் மனங்களையும் வென்றுள்ளது. அந்த வீடியோவில், அடுப்பில் சுடச்சுட ரொட்டிகளைத் தயாரிக்கும் அந்தப் பெண்மணி, குரங்குகளின் நாக்கு வெந்துவிடக் கூடாது என்பதற்காக, அவற்றை வாயால் ஊதி ஆறவைத்து ஒவ்வொன்றாக ஊட்டுகிறார்.
மேலும் வழக்கமாக உணவிற்காக சண்டையிடும் குரங்குகள், இந்தப் பெண்மணியின் அன்பிற்கு கட்டுப்பட்டு எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாக அமர்ந்து தங்களின் முறைக்காகக் காத்திருந்து உணவை வாங்கி உண்பது காண்போரைக் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
“>
இந்திய கலாச்சாரத்தின் அடையாளமான சக உயிரினங்கள் மீதான கருணையை இந்த வீடியோ மிக அழகாகப் பிரதிபலிக்கிறது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள ஆழமான பிணைப்பையும், தாய்மை கலந்த அன்பையும் வெளிப்படுத்தும் இந்த வீடியோ ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
இந்நிலையில் “இதுவே உண்மையான இந்தியா” என்றும் “மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது” என்றும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்துக்களைப் பகிர்ந்து அந்தப் பெண்மணியின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.