ஐயப்பனின் கருப்புத் துண்டை பிடுங்கிய கல்லூரி நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொங்குநாடு கல்லூரிக்கு ஆளுநர் ரவி வருகிறார். இதனால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தவர்களிடமிருந்து கறுப்புத் துண்டுகளை பிடுங்கிக் கொண்டுதான் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கேட்டால் ஆளுநர் ரவிக்கு கருப்பு துண்டு பிடிக்காது, கருப்பு என்றால் பிடிக்காது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருப்பு துண்டுகளை கல்லூரி நிர்வாகம் பிடுங்கி வைத்துள்ளது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியது. அதில் ஒரு பிரிவினரை கோவை சிவனாந்த காலனியில் உள்ள லயன்ஸ் கிளப் மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்துள்ளார்கள்.
சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என மாற்றிப் பெயரிட்டு, வரலாற்றை திரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். இக்கருத்தரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார். இதனை எதிர்த்து, கோவை டாடாபாத் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.