திருப்பரங்குன்றம் மலையில் 'தீபம் ஏற்றுவோம்' என அகல் விளக்குடன் சென்றவர்களை கைது செய்த போலீசார்!
Top Tamil News December 22, 2025 04:48 PM

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் என்று கையில் அகல் விளக்கு சட்டியுடன் வந்த பழனியாண்டவர் கோவில் தெரு பொது மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை திருப்பரங்குன்றம் போலீஸாரால் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் சார்பாக இன்று இரவு சந்தனக்கூடு திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு செய்வதற்காக நேற்று நான்கு இஸ்லாமியர்கள் மலை மீது சென்றதற்காக மலை செல்லும் படிக்கட்டு இருக்கக்கூடிய பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் நேற்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று இரவு மலை மீது சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற உள்ள நிலையில் திடீரென பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த மக்கள் கையில் அகல்விளக்கு சட்டியுடன் மலை மீது தீபம் ஏற்றோம் என்று கோஷமிட்டவாரு வந்ததால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் இன்று மாலை மலை மீது கொடியேற்றுவதற்கு இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளித்தால் தீபம் ஏற்றுவதற்கு தங்களுக்கும் அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையும் நடத்தியும் கைவிடாத காரணத்தால் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த இருவருக்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.