நிதி அகர்வாலை தொடர்ந்து ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய சமந்தா ரூத் பிரபு – வைரலாகும் வீடியோ
TV9 Tamil News December 22, 2025 05:48 PM

இந்திய சினிமாவைப் பொருத்தவரை சமீப காலமாக பிரபலங்கள் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி வரும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை நிதி அகர்வால் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிய போது அவரிடம் ரசிகர்கள் அத்துமீறிய வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் தி ராஜா சாப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது நிதி அகர்வாலுக்கு இப்படி நடந்த சம்பவர் விமர்சனத்திற்குள்ளானது. சரியான பாதுகாப்பு இல்லை என்று பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து பிரபலங்களின் பாதுகாப்படில் கேள்வி குறி எழுந்து வரும் நிலையில் அடுத்தடுத்து இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பிரபலங்களிடையே மட்டும் இன்றி மக்களிடமும் தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் சூழலில் தற்போது நடிகை சமந்தா ரூத் பிரபு தனியார் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது சரியான பாதுகாப்பு இல்லாமல் கூட்ட நெரிசலில் நடிகை சமந்தா ரூத் பிரபு சிக்கி வெளியேற முடியாமல் சிரமப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

நிதி அகர்வாலை தொடர்ந்து ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய சமந்தா:

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக நடிகை நிதி அகர்வால் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கியது போல தற்போது நடிகை சமந்தா ரூத் பிரபு ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் நேற்று ஞாயிற்று கிழமை காலை ஒரு கடை திறப்பு விழாவில் நடிகை சமந்தா பங்கேற்ற போது இந்த சம்பவம் நடைப்பெற்று உள்ளது. இது பிரபலங்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சிம்பு படம் குறித்து அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சூப்பர் அப்டேட்!

இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் வீடியோ:

Samantha mobbed by fans sunday early morning in Hyderabad at shop inaugural event 😱@Samanthaprabhu2 #SamanthaRuthPrabhu #Samantha#TeluguNews #Tollywood #Bollywood pic.twitter.com/Mvtg0l9Ikj

— Abhileaks (@wishvasam)

Also Read… ஒரு கனவுடன் தொடங்கிய பயணம் பல இதயங்களில் இடம் பிடித்தது – திரையரங்குகளில் வெளியாகி 7 ஆண்டுகளைக் கடந்தது கனா படம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.