ஹெத்தையம்மன் கோயில் திருவிழா... நீலகிரி மாவட்டத்திற்கு ஜன.7 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
Dinamaalai December 22, 2025 05:48 PM

ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்து கொள்ள வசதியாக நீலகிரி மாவட்டத்துக்கு வரும் ஜனவரி 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜனவரி 7ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும். 

நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் வசிக்கும் படகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா ஜன. 7 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 7ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.