யு-19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் மத்ரே மற்றும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அலி ராசா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஆயுஷ் மத்ரே ஆட்டமிழந்த பிறகு, அலி ராசா அவரை ஆக்ரோஷமான முறையில் வழியனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த மத்ரே, மைதானத்திலேயே அலி ராசாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் இருவரும் நேருக்கு நேர் நின்று காரசாரமாகப் பேசிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த மோதல் முற்றிய நிலையில், களத்தில் இருந்த நடுவர்கள் உடனடியாக தலையிட்டு இரு வீரர்களையும் சமாதானப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
“>
இறுதிப்போட்டியின் அழுத்தம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பாரம்பரிய கிரிக்கெட் போட்டி என்பதால், வீரர்களிடையே உணர்ச்சிகள் கொந்தளித்ததாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு முக்கியமான தொடரின் இறுதி ஆட்டத்தில் இளம் வீரர்கள் இது போன்ற ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டது விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.