வேலை தேடிய 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. வீட்டுக்கு அழைத்த நபர் செய்த 'அந்த' காரியம்! புவனேஷ்வரில் பகீர்!
SeithiSolai Tamil December 23, 2025 01:48 AM

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் தனக்கு ‘டேட்டா என்ட்ரி’ வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளார். இது தொடர்பாகப் பேசுவதற்குத் தனது வீட்டிற்கு வருமாறு அந்த நபர் அழைத்ததை நம்பி, கடந்த வியாழக்கிழமை மதியம் சிறுமி அங்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த நபர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து சிறுமியைத் தனிமையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்துச் சிறுமி அளித்த தகவலின் பேரில், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகப் புவனேஷ்வர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த இரண்டு குற்றவாளிகளையும் துரிதமாகச் செயல்பட்டுக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைநகரில் வேலை தேடும் இளம் பெண்களைக் குறிவைத்து அரங்கேறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.