Health Tips: வெறும் வயிற்றில் தினமும் ஒரு பல் பூண்டு.. உடலில் இவ்வளவு ஆரோக்கியம் நடக்கும்..!
TV9 Tamil News December 23, 2025 01:48 AM

பூண்டு நம் சமையலறைகளில் ஒரு முக்கிய உணவு பொருளாகும். இது அதன் சுவைக்கு மட்டுமல்ல, அதன் மருத்துவ மற்றும் குணப்படுத்தும் பண்புகளுக்கும் பெயர் பெற்றது. இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பல நோய்களைத் தடுப்பதில் உதவியாக இருக்கும். இதன் முக்கிய நன்மை அல்லிசின் எனப்படும் ஒரு கலவை காரணமாகும். பூண்டில் பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் (Magnesium) போன்ற அத்தியாவசிய தாதுக்களும் ஏராளமாக உள்ளன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே (Vitamin C) , ஃபோலேட், நியாசின் மற்றும் தியாமின் ஆகியவையும் உள்ளன. அதன்படி, வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தினமும் காலையில் டோண்ட் மிஸ்..! இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் 6 பானங்கள்..

நோய் எதிர்ப்பு சக்தி:

பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. பூண்டில் உள்ள அல்லிசின் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.

இதயத்தை ஆரோக்கியம்:

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது கொழுப்பின் அளவை சமப்படுத்த உதவுகிறது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பைப் பராமரிக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.

எடை குறைப்பு:

பூண்டு வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்துகிறது, இது உடல் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது. பச்சை பூண்டை தொடர்ந்து சாப்பிடுவது எடை குறைக்க உதவும்.

நச்சு நீக்கும்:

பூண்டு உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள சல்பர் கலவைகள் கல்லீரலை சுத்தப்படுத்தி, உடலை அதிக சுறுசுறுப்பாக வைக்க உதவி செய்யும்.

செரிமானம்:

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு, வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.

சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை:

பூண்டில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றன. அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமப் பிரச்சினைகளைக் குறைக்க உதவுகின்றன. அதே நேரத்தில், முடியை வலுப்படுத்தி முடி உதிர்தலை தடுக்கின்றன.

ALSO READ:பலவீனத்தை தரும் இரும்புச்சத்து குறைபாடு.. இந்த 6 சைவ உணவுகள் சரிசெய்யும்..!

சர்க்கரை நோய்:

இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க பூண்டு உதவியாகக் கருதப்படுகிறது. தினமும் குறைந்த அளவில் இதை உட்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

பூண்டை எப்படி உட்கொள்வது?
  • காலையில் பல் துலக்கிய பிறகு ஒரு பூண்டுப் பல்லை உரித்து லேசாக மெல்லலாம். அப்படி இல்லையென்றால், அப்படியே முழுங்கலாம்.
  • பூண்டை பச்சையாக சாப்பிடுவது கடினமாக இருந்தால், அதை வெதுவெதுப்பான நீரில் போட்டு குடிக்கலாம்.
  • உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் அதை உட்கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். மேலும், இதை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.