“தப்பு பண்ணிட்டேன் விட்ருங்க!”… லஞ்சம் கேட்டு மிரட்டல்.. ஓட்டுனரின் மாஸ் பதிலடி.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!
SeithiSolai Tamil December 23, 2025 04:48 AM

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில், லாரி டிரைவர் ஒருவரிடம் லஞ்சம் கேட்ட புரோக்கர், ஓடும் லாரியில் 5 கிலோமீட்டர் தூரம் உயிருக்குப் போராடியபடி தொங்கிக்கொண்டு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிர வைத்துள்ளது.

ஹனுமனா RTO சோதனைச் சாவடி அருகே, டிரைவர் சுமித் படேலிடம் ஒரு புரோக்கர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். லஞ்சத்தைக் கொடுக்க மறுத்த டிரைவர், லாரியை எடுக்க முயன்றபோது, அந்த புரோக்கர் வலுக்கட்டாயமாக லாரியின் முன்பக்கத்தில் ஏறியுள்ளார். ஆனால், டிரைவர் லாரியை நிறுத்தாமல் 5 கி.மீ தூரம் அதிவேகமாக ஓட்டியதால், அந்த நபர் லாரியில் தொங்கியபடி உயிருக்குக் கெஞ்சியுள்ளார்.

வைரலாகும் அந்த வீடியோவில், லாரியில் தொங்கிக்கொண்டு வரும் புரோக்கர், “தப்பு பண்ணிட்டேன்.. என்னை விட்ருங்க” என்று டிரைவரின் காலைத் தொட்டு கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

சோதனைச் சாவடிகளில் புரோக்கர்களின் லஞ்சத் தொல்லை தாங்க முடியாமல்தான் தான் இப்படிச் செய்ததாக டிரைவர் சுமித் படேல் தெரிவித்துள்ளார். “இனிமேல் எந்த டிரைவரையும் தொந்தரவு செய்ய மாட்டேன்” என அந்த நபர் சத்தியம் செய்த பிறகே லாரியை நிறுத்தி அவரை இறக்கிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் லாரி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், புரோக்கர்களின் அராஜகத்திற்கு எதிராகப் பேச வைத்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.