கோலிவுட் சினிமாவில் தனது சிறுவயது முதல் திரைப்படங்களில் நடித்து கலக்கிவருபவர்தான் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை கிட்டத்தட்ட 48 படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 49வது படமாக தயாராகிவருவதுதான் அரசன் (Arasan). இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்க, கலைப்புலி எஸ் தாணு (Kalaipuli S Thanu) தயாரித்துவருகிறார். இதுவரை வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணி எந்த படத்திலும் இணையாத நிலையில், இந்த அரசன் படத்தில் இணைந்துள்ளது. மேலும் சிலம்பரசனின் இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைத்துவருகிறார். இவரும் முதல் முறையாக சிலம்பரசனுடன் இப்படத்தில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் கோவில்பட்டியில் நடைபெற்றுவந்தது. இந்த ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது கூறப்படும் நிலையில், 2வது கட்ட ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை அடுத்து நடைபெறும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) , யோகலட்சுமி, ஆண்ட்ரியா உட்பட பல்வேறு பிரபலங்கள் நடிக்கிறார்கள். அந்த வகையில் வெற்றிமாறன் தனுஷ் (Dhanush) கூட்டணியில், உருவான அசுரன் (Asuran) பட நடிகரும், பாடகருமான டீஜெய் அருணாச்சலம் (Teejay Arunachalam) இப்படத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: முழுவதும் திரில்லர்.. சந்தீப் பிரதீப்பின் எக்கோ படத்தை எந்த ஓடிடியில்.. எப்போது பார்க்கலாம்?
அரசன் திரைப்படத்தில் இணையும் நடிகர்கள் :#Arasan — #Teejay Arunasalam & #Yogalakshmi On Board ✅ pic.twitter.com/d7sp8o8aUW
— Movie Tamil (@_MovieTamil)
இந்த அரசன் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியான நடிகை யார் என்பது தொடர்பான ஆறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. அதன்படி இந்த் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் மிக வேடத்தில் நடிக்கிறார். இவர்களை அடுத்ததாக ஆண்ட்ரியா மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட நடிகை யோகலட்சுமியும் இதில் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவரோடு தற்போது நடிகரும், பாடகருமான டீஜெய் அருணாச்சலமும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: 2025ல் வெளியான மலையாளம் பெஸ்ட் திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன?
இந்நிலையில் நடிகர் டீஜெய் அரசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த அரசன் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. அதன்படி விரைவில் இது பற்றிய தகவல்களும் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த அரசன் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு தீபாவளி அல்லது ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.