பெங்களூரை சேர்ந்தவர் ருக்மணி வஸந்த். இவரின் அப்பா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து அசோக சக்ரா பட்டம் வாங்கியவர்.
2023ம் வருடம் வெளியான் Sapta Saagaradaache Ello எனும் கன்னட திரைப்படம் மூலம் ருக்மணி பிரபலமானர். தொடர்ந்து 4 படங்கள் கன்னடத்தில் நடித்த அவர் அடுத்து ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு படங்களில் நடித்து தொடங்கினார்.
தமிழைப் பொறுத்தவரை விஜய் சேதுபதி நடித்த Ace திரைப்படத்தில்தான் முதன் முதலில் நடித்தார் ருக்மணி வஸந்த். அந்த படத்தில் ருக்மணி நன்றாக நடித்திருந்தாலும் படம் சரியாக ஓடவில்லை. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உருவான மதராஸி திரைப்படத்தில் நடித்திருந்தார் ருக்மணி. இந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
ஒரு இளமையான, அழகான, திறமையான கதாநாயகி தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார் என ரசிகர்கள் சொன்னார்கள். அதேபோல் அடுத்து ரிஷப் செட்டி இயக்கி நடித்து வெளியான காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படத்திலும் ருக்மணி வஸந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் பேன் இந்தியா படமாக வெளியாகி எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்று 800 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது கேஜிஎப் பட ஹீரோ யாஷ் நடித்துவரும் டாக்ஸி படத்தில் நடித்து வருகிறார் ரூக்மணி வஸந்த். அதேபோல் அடுத்து மணிரத்தினம் இயக்கவுள்ள படத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான்தான் சமீபத்தில் போட்டோஷூட் நடத்தப்பட்ட தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இளசுகளின் மனசை கெடுத்துள்ளார் ருக்மணி வஸந்த்.