H-1B விசா புதிய கட்டுப்பாடு: "தொடர்ந்து பேசுவோம்" - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன?
Vikatan December 27, 2025 06:48 PM

ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்கள் சோதனையிடப்படும் என்பதுதான் ஹெச்-1பி விசாவிற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் லேட்டஸ்ட் நெருக்கடி.

இதனால், இந்தியாவில் டிசம்பர் 15-ம் தேதி முதல் முடிவாகியிருந்த ஆயிரக்கணக்கான ஹெச்-1பி விசா நேர்காணல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஹெச்-1பி விசா பிரச்னை குறித்து அமெரிக்காவிடம் பேசியுள்ளோம்.

இந்தியர்களுக்கு இதில் ஏற்பட்டுள்ள பிரச்னையைச் சரிசெய்ய தொடர்ந்து அமெரிக்கா உடன் பேசுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால் ஏன் இது முக்கியம்?

இந்திய அரசு ஹெச்-1பி விசா பிரச்னையில் தலையிட்டு முடிவெடுப்பது மிக மிக முக்கியம்.

அமெரிக்காவின் ஹெச்-1பி விசா பெறும் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தியர்களே.

சமூக வலைத்தளச் சோதனை காரணத்தால் மே மாதம் வரையில் நேர்காணல்கள் தள்ளிப் போயிருக்கின்றன.

அதுவரை இவர்களுக்கு வேலை இருக்காது; நிதி நெருக்கடி ஏற்படும். இவர்களின் குடும்பம் பாதிக்கப்படும்.

மே மாதம் வரையில் நேர்காணல் தள்ளிப்போனால், குடும்பத்துடன் அமெரிக்கா செல்லத் திட்டம் வைத்திருப்பவர்கள் பெரிய பிரச்னையைச் சந்திக்க நேரிடும்.

காரணம், மே மாதம் நேர்காணல் முடித்து அமெரிக்கா செல்லும்போது, குழந்தைகளுக்குப் பள்ளி, கல்லூரியில் அட்மிஷன் கிடைப்பது சிரமம்.

இதைச் சுற்றி இப்படி பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆக, இதில் இந்திய அரசு இன்னும் முனைப்பு காட்ட வேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.