பெற்றெடுத்த தாயே குழந்தையை நடுத்தெருவில் தவிக்கவிட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம் எக்ஸ் (X) தளத்தில் காணொளியாக வெளியாகி வைரலாகி வருகிறது. மதுபோதையில் இருந்த ஒரு பெண், தனது கைக்குழந்தையை ஒரு இ-ரிக்ஷாவிலேயே (e-rickshaw) விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த காவலர்கள் அந்தத் தனித்து விடப்பட்ட குழந்தையைக் கண்டெடுத்துப் பாதுகாத்துள்ளனர். தாய்ப்பாசத்தைக் காட்ட வேண்டிய கைகள், போதையில் குழந்தையையே மறந்தது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொளியைப் பதிவிட்டவர், “இன்றைய நவீன காலப் பெண்களைத் திருமணம் செய்வதில் உள்ள ஆபத்து இதுதான். இப்படிப்பட்டவர்கள் நல்ல மனைவியாகவோ, தாயாகவோ இருக்க முடியாது” என்ற காட்டமான கருத்தையும் முன்வைத்துள்ளார். இந்தச் சம்பவம், நவீன வாழ்க்கை முறை மற்றும் குடும்பப் பொறுப்புகள் குறித்த ஒரு பெரிய விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது.