“புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”- விஜய்
Top Tamil News December 29, 2025 11:48 AM

மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரை வணங்குகிறேன். புரட்சிக்கலைஞருக்கு என் புகழஞ்சலி என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழக அரசியலில் மிகவும் வித்தியாசமான மனிதராக நோக்கப்படும், விஜயகாந்த்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.