இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் 3 போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றிய நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் 4-வது டி20 போட்டி நடைபெற்றது. ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டியது. மந்தனா 48 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

இப்போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 4-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தப் போட்டியில் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனாவின் மொத்த சிக்சர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. இதற்கு முன்பு இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 78 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரைப் பின்னுக்குத் தள்ளி, டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார்.

இந்திய மகளிர் அணி இந்தத் தொடரில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஸ்மிருதி மந்தனாவின் இந்த ஃபார்ம், அடுத்தடுத்து வரும் முக்கியமான தொடர்களுக்கு இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!